திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் |

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'லிங்கா' படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர், கடந்த ஆண்டு தனது காதலர் ஜாகீர் இக்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது கணவர் இஸ்லாமியராக இருந்தாலும் தான் அவரது மதத்துக்கு மாறாமல் ஹிந்துவாகவே தொடர்ந்து வருகிறார் சோனாக்ஷி சின்ஹா.
இந்த நிலையில் சமீபத்தில் தனது கணவர் ஜாகீர் இக்பாலுடன் அபுதாபி சென்றுள்ளார் சோனாக்ஷி சின்ஹா. அப்போது அவர்கள் இருவரும் ஒரு மசூதிக்கு சென்றபோது, சுடிதார் அணிந்துள்ள சோனாக்ஷி சின்ஹா துப்பட்டாவை தலையில் முக்காடு போட்டுள்ளார். இது குறித்த புகைப்படம் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். ஆனால் அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், மசூதிக்குள் அவர்கள் செருப்பு அணிந்து சென்றதாக சொல்லி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அதோடு சோனாக்ஷி சின்ஹாவை பார்த்து, மசூதிக்குள் செருப்பு போட்டு செல்லும் நீங்கள் கோவிலுக்குள் இப்படி செல்வீர்களா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு சோனாக்ஷி சின்ஹா ஒரு பதில் கொடுத்து இருக்கிறார். அதில், ''நாங்கள் செருப்பு அணிந்து மசூதிக்குள் செல்லவில்லை. மசூதிக்கு வெளியே தான் காலில் செருப்பு அணிந்து இருந்தோம். மசூதிக்குள் செல்வதற்கு முன்பு எங்களது செருப்புகளை வெளியில் விட்டு விட்டு தான் சென்றோம். அதனால் மசூதிக்கு வெளியே நாங்கள் செருப்பு காலுடன் நடந்து வந்ததை பார்த்து இதுபோன்று தவறான பதிவுகளை வெளியிட வேண்டாம். பிரபலங்களை ஏதாவது வகையில் சர்ச்சையில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று உண்மைக்கு புறம்பான பதிவுகளை வெளியிடுவதை விட்டு விடுங்கள்'' என்றும் தன்னை விமர்சித்தவர்களுக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா.