பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படமாக 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். சுவாசிகா, சிவதா , யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.ஜே. பாலாஜி கருப்பு படத்தை குறித்து கூறியதாவது, "கருப்பு படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர முயற்சி செய்தோம். ஆனால், கிராபிக்ஸ் பணிகள் நிறைவு பெறாததால் படத்தை தீபாவளிக்கு கொண்டு வர முடியவில்லை. கருப்பு படம் ரொம்ப நல்லா வந்து இருக்கு. என் தயாரிப்பாளருக்கு படம் பிடித்துள்ளது. கருப்பு படத்தின் முதல் பாடலை தீபாவளிக்கு வெளியிடுகிறோம்." எனக் கூறினார்.