ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

கன்னட சினிமாவை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார் ருக்மணி வசந்த். இந்த நிலையில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் மூலம் தற்போது இந்திய அளவில் கிரஷ் ஆகிவிட்டார் ருக்மணி வசந்த்.
இதையடுத்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''இதுவரை தென்னிந்திய நடிகையாக இருந்த நான் இந்த காந்தாரா சாப்டர்-1 படத்தின் மூலம் இந்திய நடிகை ஆகிவிட்டேன். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதோடு தற்போது ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக பிரசாந்த் நீல் இயக்கும் 'டிராகன்' படம் மற்றும் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' போன்ற பான் இந்தியா படங்களிலும் நடித்து வருகிறேன். அதனால் இந்த படங்கள் திரைக்கு வரும்போது இன்னும் பெரிய அளவில் இந்திய ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவேன். இதன் காரணமாக அடுத்தடுத்து இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான பான் இந்தியா கதைகளை தேர்வு செய்யப் போகிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார் ருக்மணி வசந்த்.




