ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் | நடிகர் ஜெய்சங்கர் பெயரிலான சாலை திறப்பு | பாரம்பரியமிக்க ஏவிஎம் தியேட்டர் இடிப்பு |
ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கடந்த 2022ம் ஆண்டு வெளியான காந்தாரா படம் 14 கோடியில் தயாரிக்கப்பட்டு 450 கோடி வரை வசூலித்தது. இதன் காரணமாக தற்போது அவர் இயக்கி நடித்திருக்கும் காந்தாரா சாப்டர்-1 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வரும் இந்த படம் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், பெங்காலி , ஆங்கிலம் என பல மொழிகளில் வெளியாகிறது.
125 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தின் சார்ட்டிலைட் உரிமையை ஜி நெட்வொர்க் 80 கோடிக்கு வாங்கி உள்ளது. அதேபோல் தமிழ்நாடு தியேட்டர் உரிமை 35 கோடிக்கும், தெலுங்கு தியேட்டர் உரிமை 95 கோடிக்கும் விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ 125 கோடிக்கு வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்த படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறது.