வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

'பார்டர் 2' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான டி-சீரிஸ் மற்றும் ஜே.பி. பிலிம்ஸ் இணைந்து, இந்திய ஆயுதப்படைகளின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றும் விதமாக 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' எனும் டிரைலரை வெளியிட்டுள்ளது. உணர்ச்சிமிகுந்த இந்த டிரைலர், நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த வீரர்களின் துணிச்சலையும், போர்க்களத்தைத் தாண்டி அவர்கள் விட்டுச் செல்லும் குடும்பங்கள் அனுபவிக்கும் வலியையும் ஆழமாக வெளிப்படுத்துகிறது.
மிதுன் இசையமைத்து, மனோஜ் முண்டாஷிர் எழுதிய, சோனு நிகமின் காலத்தால் அழியாத குரலில் உயிரூட்டப்பட்ட, சமீபத்தில் வெளியிடப்பட்ட 'மிட்டி கே பேட்டே' என்ற பாடலின் பின்னணியில் இந்த டிரெய்லர் அமைந்துள்ளது.
இந்தப் பாடல் வெளியீட்டு நிகழ்வில் நடிகர்கள் வருண் தவான், ஆஹான் ஷெட்டி, தயாரிப்பாளர்கள் பூஷண் குமார், நிதி தத்தா, இசையமைப்பாளர் மிதூன், பாடலாசிரியர் மனோஜ் முன்டஷிர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனுடன், நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினரும், முன்னாள் ராணுவ வீரர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கர்னல் சுஷில் குமார் தஹியா (பரம வீரச் சக்ரா பெற்ற மறைந்த ஹோஷியார் சிங் தஹியாவின் மகன்), ஸ்க்வாட்ரன் லீடர் மறைந்த பர்வேஸ் ஜமாஷ்ஜியின் மனைவி ஜரின் ஜமாஷ்ஜி மற்றும் மகன் ரஸ்டம் ஜமாஷ்ஜி, கார்கில் போரின் நாயகன் நாயக் தீப்சந்த், மறைந்த வீரர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டு நிகழ்வை மேலும் உணர்ச்சிபூர்வமாக மாற்றினர்.
'பார்டர் 2' படத்தை குல்ஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் நிறுவனம், ஜே.பி. தத்தாவின் ஜே.பி. ஃபிலிம்ஸுடன் இணைந்து வழங்குகிறது. பூஷன் குமார், கிரிஷன் குமார், ஜே.பி. தத்தா மற்றும் நிதி தத்தா ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்தை அனுராக் சிங் இயக்கியுள்ளார். இப்படம் நாளை (ஜன.23) வெளியாகிறது.




