'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் |

'கருப்பு, விஸ்வாம்பரா, ராம்' என மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார் திரிஷா. எப்போதுமே தனது உடல் எடையை சீராக பராமரித்தபடி பிட்டாக காட்சி கொடுக்கும் திரிஷா, தற்போது துபாயில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் துபாய் ஹோட்டலில் உள்ள ஜிம்மில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார் திரிஷா. அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. குறிப்பாக 'பொன்னியின் செல்வன், தக்லைப்' போன்ற படங்களில் தனது அழகான தோற்றத்தால் பார்வையாளர்களை கவர்ந்த த்ரிஷா, இந்த புகைப்படத்தில் ஒல்லிக்குச்சியாக மிகவும் வித்தியாசமாக தெரிகிறார். அதை பார்த்த ரசிகர்கள் எதற்காக இந்த அளவுக்கு உடல் மெலிந்து விட்டீர்கள்? பார்ப்பதற்கு நோயாளி போலவே இருக்கிறீர்கள்? என்று தங்களது கவலையை கமெண்டுகளில் தெரிவித்து வருகிறார்கள்.