'இந்தியன் 3' படத்திற்கு கெடுவைத்த ஷங்கர்! | குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைக்கிறது நல்லது! - பார்த்திபன் | ஹர்பஜன் சிங்கின் இரண்டாவது தமிழ் படம் குறித்து தகவல் இதோ! | 15 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'ஆரண்ய காண்டம்' | உறியடி விஜய்குமார் நடிக்கும் 'அறிவு' | பெண்களின் உணர்வை சொல்லும் 'மயிலா': மகளிர் தினத்தில் டீசர் வெளியீடு | ஏப்.,3ல் ரிலீசாகும் பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' | கென் கருணாஸின் 'யூத்' டிரைலர் வெளியீடு | சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல் | தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி |

சசிகுமாரின் ‛அயோத்தி' படத்தில் அப்பாவி, வடமாநில பெண்ணாக நடித்தவர் ப்ரீத்தி அஸ்ராணி. அவரின் நடிப்பும், அழுகையும் பல விமர்சனங்களில் குறிப்பிடப்பட்டது. அவருக்கு பல விருதுகள் கிடைத்தன. அவர் நிஜத்தில் சிந்தி இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், ஐதராபாத்தில் வளர்ந்தவர். பல தெலுங்கு படங்களில் நடித்தவர்.
தமிழில் அயோத்தி தவிர, உறியடி விஜயகுமார் நடித்த எலெக்ஷன் படத்திலும் ஹோம்லியாக நடித்து இருந்தார். தொடர்ச்சியாக இப்படிப்பட்ட கேரக்டரில் நடித்தால் வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்தவர் இப்போது கவின் நடிக்கும் ‛கிஸ்' படத்திலும், எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடிக்கும் ‛கில்லர்' படத்திலும் மார்டன் வேடத்தில் நடிக்கிறார். அந்த அஸ்ராணியா இது என்று பலரும் கேட்கும் அளவுக்கு அவரின் தோற்றம் மாறியுள்ளது.
‛அயோத்தி' படத்துக்குபின் சில படங்களில் நடித்துவிட்டார் சசிகுமார். ப்ரீத்தி அஸ்ராணியும் அப்படியே. ஆனால், அந்த படத்தை இயக்கிய மந்திரமூர்த்தி இன்னமும் அடுத்த படம் பண்ணவில்லை. ஹீரோவுக்கு வெயிட் பண்ணுவதாக தகவல் வெளியாகி உள்ளது.




