தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி |

ஆரம்ப காலங்களில் ஜெமினி கணேசன் நடிப்பு வாய்ப்பிற்காக மிகவும் சிரமப்பட்டார். எம்ஜிஆர், சிவாஜியை தாண்டி அவர் போராட வேண்டியது இருந்தது. சில படங்களில் நாயனாக நடித்திருந்த நிலையில் 'கணவனே கண்கண்ட தெய்வம்' என்ற படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பட்டன்ன நாராயண அய்யங்கார் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாது.
இதற்கான நடிகர்கள் தேர்வு நடந்தபோது அதில் ஜெமினி கணேசனும் கலந்து கொண்டார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. படத்தின் நாயகன் சில காலங்கள் கூன்விழுந்த பிச்சைக்காரன் தோற்றத்தில் இருக்க வேண்டும், ஜெமினி கணேசன் கவர்ச்சியா இருப்பதால் அந்த தோற்றத்திற்கு அவர் பொருந்த மாட்டார் என்று கருதி நிராகரிக்கப்பட்டார்.
தயாரிப்பாளர் நாரயண அய்யங்கார் ஒரு நாள் தனது அலுவலத்தில் இருந்து வெளியே வந்தபோது கூன் விழுந்த ஒரு பிச்சைக்காரன் அவரிடம் யாசகம் கேட்டான். அய்யங்காரும் அரையணா பிச்சையிட்டார். பின்னர் அந்த பிச்சைக்காரன் வேடம் கலைத்தான் அது ஜெமினி கணேசன்.
தன்னால் கூன்விழுந்த பிச்சைக்காரனாக நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கவே ஜெமினி அப்படி நடந்து கொண்டார். இதை பார்த்து வியந்த நாராயண அய்யங்கார் அவரையே படத்தின் நாயகன் ஆக்கினார்.
இந்த படத்தில் ஜெமினியுடன், அஞ்சலி தேவி, லலிதா, எம்.என். நம்பியார், சித்தூர் வி. நாகையா, எம்.என். ராஜம், டி.பி. முத்துலட்சுமி மற்றும் 'நண்பர்' ராமசாமி உள்பட பலர் நடித்தனர். டி.ஆர்.ரகுநாத் இயக்கினார். படம் பெரிய வெற்றி பெற்றது. பின்னர் தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஜெமினி கேரியரில் திருப்புமுனை தந்த படமாகவும் அமைந்தது.