சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா |

கடந்த 2004ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் '7ஜி ரெயின்போ காலனி'. இந்தப்படம் தெலுங்கிலும் ‛7ஜி பிருந்தாவன் காலனி' என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.
கடந்த சில வருடங்களாக 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கி வருகிறார் செல்வராகவன். ரவி கிருஷ்ணாவே மீண்டும் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நகராமல் அப்படியே நின்றது. இதற்கு காரணமாக அனஸ்வரா ராஜன் கால்ஷீட் இல்லை என கூறப்பட்டது. தற்போது மீதமுள்ள படப்பிடிப்பை நேற்று தொடங்கியுள்ளனர். இந்த கட்ட படப்பிடிப்பை தொடங்கும்போது பாடல் காட்சி உடன் தொடங்கியுள்ளனர்.