'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி மற்றும் பலர் நடித்து 2022ம் வருடம் வெளிவந்த படம் 'பாபா'. இப்படத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாரம் டிசம்பர் 10ம் தேதி மறு வெளியீடு செய்ய உள்ளார்கள்.
அதற்காக தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடைபெறுகிறது. சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் அதிகாலை காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 'பாபா' வெளிவந்த 2002ம் ஆண்டில் அதிகாலை காட்சிகள் என்பது நடைமுறையில் இல்லை. 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் ஒரு படத்திற்கு அதிகாலை காட்சிகள் ஹவுஸ்புல் என்பது வியப்பான ஒன்றுதான்.
இந்த வாரம் பல புதிய படங்கள் வெளியாக உள்ள நிலையில் அவற்றிற்குக் கூட அதிகாலை சிறப்புக் காட்சிகள் நடைபெறவில்லை. ஆனால், 'பாபா' படத்திற்கு அதிகாலை காட்சி, அதுவும் ஹவுஸ்புல் என்பதை திரையுலகினரும், ரசிகர்களும் அதிசயத்துடன் பார்க்கிறார்கள்.