சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் | சபரிமலை தங்க தகடு திருட்டு வழக்கில் ஜெயராமிடம் விசாரிக்க முடிவு | பிளாஷ்பேக்: பாண்டியராஜன் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை | பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா? | தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! |

'மங்காத்தா' படத்தின் மூலம் அறிமுகமானவர் மகத் ராகவேந்திரா. அதன் பிறகு 'பிரியாணி, ஜில்லா, வடகறி, சென்னை 28, மாநாடு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்ற படம் தான் அவர் கடைசியாக நடித்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த அவர் தற்போது சிக்ஸ் பேக் உடலுக்கு மாறி அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார். இதுகுறித்து மகத் வெளியிட்டுள்ள பதிவில் "கடந்த சில மாதங்களாக நான் ஒதுங்கி இருந்து, சுய பரிசோதனை செய்து, என்னை நானே செதுக்கிக் கொண்டேன். தற்போது, புதிய நோக்கத்துடன், மேம்பட்ட ஒரு நபராகவும் மீண்டும் களம் இறங்குவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தப் பயணத்தின் வெளிப்பாடே, நான் வெளியிட்டுள்ள எனது சிக்ஸ் பேக் தோற்றம்.
இது வெறும் உடலின் அழகியல் காட்சி மட்டுமல்ல. நான் கடினமாக உழைத்த மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை இது வெளிப்படுத்துகிறது.
இனிவரும் காலங்களில், நல்ல கதைகளை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் படைப்புகளில் நான் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதே எனது முதன்மை நோக்கம். அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை, மீண்டும் சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பதில் எனது கவனம் இருக்கும். என்று கூறி இருக்கிறார்.




