அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு |

பெண்களுக்கு எதிரான பெரும் கொடுமை வரதட்சணை. பெண்கள் படித்து முன்னேறி வேலைக்கு செல்வதால் தற்போது வரதட்சணை சற்று குறைந்திருக்கிறது.
ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரதட்சணை கோர தாண்டவம் ஆடியது. விதவை மறுமணம், பெண் விடுதலை, மதுவின் கொடுமை, அரசியல் என பல சமூக கருத்துக்களுடன் படங்கள் வெளிவந்த காலத்தில் வரட்சணை கொடுமை பற்றி ஆங்காங்கே சில காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளது.என்றாலும் வரதட்சணைக்கு எதிரான முதல் முழுநீள படம் என்று 'கோடீஸ்வரன்' படத்தை சினிமா வரலாற்று ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மராத்தி எழுத்தாளர் பி.பி.வார்க்கரர் எழுதிய 'ஹாச் முல்ச்சா பாப்' என்ற நாவல்தான் இந்த படத்தின் கதை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் இது திரைப்படமாகி உள்ளது. நாடகமாகவும் நடத்தப்பட்டு வந்தது. தமிழில் இந்த கதையை கோடீஸ்வரன் என்ற பெயரில் சுந்தர்ராவ் நட்கர்ணி இயக்கினார்.
சிவாஜி, பத்மினி, ராகினி, வீணை பாலச்சந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்திருந்தார். சிவாஜியும், வீணை எஸ்.பாலச்சந்தரும் நண்பர்கள் இருவரும் நகரத்தில் படித்து விட்டு தங்கள் கிராமத்துக்கு திரும்புகிறார்கள். அப்போது தங்கள் கிராமத்தில் நிலவும் வரதட்சணை கொடுமையை கண்டு கோபம் கொள்கிறார்கள். குறிப்பாக வரதட்சணை கொடுமையால் தன் மகள்களான பத்மினி, ராகினிக்கு திருமணம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள் பெற்றோர்கள்.
நண்பர்கள் இருவரும் பத்மினி, ராகினியை கொண்டே எப்படி வரதட்சணை வழக்கத்தை ஒழிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இடம்பெற்ற வரதட்சணைக்கு எதிரான தஞ்சை ராமய்யா தாசின் வசனங்கள் அப்போது பிரபலமாக இருந்தது.