2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‛சரிகமப' நிகழ்ச்சி பல திறமையான பாடகர்களை சின்னத்திரை வாயிலாக மக்களிடம் பிரபலபடுத்தியுள்ளது. ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியானது தற்போது சிறுவர்களுக்கான 'சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4' ஆக ஒளிபரப்பாகி வருகிறது. எஸ்பி சரண், ஸ்ரீநிவாஸ், சைந்தவி, ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க, அர்ச்சனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்தவாரம் லெஜண்ட்ரி சுற்றாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எஸ்பி பாலசுப்பிரமணியன், மலேசியா வாசுதேவன், கேஜே ஜேசுதாஸ் என தமிழ் திரைப்பட பாடகர்களில் ஆளுமைகளாக இருந்தவர்களின் பாடலை போட்டியாளர்கள் பாடினர். இந்த சுற்றில், மஹதி என்கிற சிறுமி எஸ்பிபியின் மிகவும் பிரபலமான பாடலான ‛மண்ணில் இந்த காதலின்றி' என்கிற பாடலை அவரை போலவே மூச்சுவிடாமல் பாடி அசத்தியிருக்கிறார்.
இதை பார்த்து வியந்த நடுவர்கள் அனைவரும் மஹதியை பாராட்டினர். அப்போது எஸ்பிபியின் மகன் எஸ்பி சரண் மிகவும் நெகிழ்ந்து மஹதியை தூக்கி முத்தமிட்டு வாழ்த்தியுள்ளார். மேலும், அவர் பேசியபோது, 'என் அப்பா இந்த பாடலை மூச்சுவிடாமல் பாடவில்லை. அவரே இதை பல இடங்களில் சொல்லியிருக்கிறார். ஆனால், மஹதி இந்த பாடலை ஒரே மூச்சில் பாடியிருப்பது மிகப்பெரிய விஷயம்' என அவரை பெருமைப்படுத்தி வாழ்த்தினார்.