ஜோதிகாவின் ஹிந்தி படம் 'சிஸ்டம்' : 22ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : 'அன்னக்கிளி'யை வெற்றிக் கிளியாக்கிய அந்த 3 டிக்கெட் | பிளாஷ்பேக் : தன் பாடல்களை கூட கேட்க முடியாமல் போன இசை அமைப்பாளர் | ஆர்த்தி ரவி குறித்து பேச கெனிஷாவுக்கு கோர்ட் தடை | நடிகர் சங்க பதவியில் இருந்து விலகிய 'திரிஷ்யம்' பட நடிகை | 'கருப்பு'க்கு கடைசிநேரத்தில் வந்த சிக்கல் : களத்தில் சூர்யா | உங்களுக்கு ஒரு கேர்ள்பிரண்ட் இருந்தாரா ? ; மோகன்லால் மகனை மடக்கிய எஸ்தர் அனில் | கொச்சி அழகும்... பின்னே ராஷ்மிகா மந்தனா பதிவும்… | 'கருப்பு' படத்தில் நட்புக்காக சம்பளம் வாங்காமல் நடித்த அஜு வர்கீஸ் | தலாய்லாமாவிடம் குடும்பத்துடன் ஆசி பெற்ற ஜெயராம் |

தென்னிந்திய மொழிகளில் தமிழ் மற்றும் கன்னட சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நேஹா கவுடா. தமிழில் இவர் நடித்த ‛கல்யாண பரிசு, பாவம் கணேசன்' ஆகிய இரண்டு தொடர்களுமே சூப்பர் ஹிட். கடந்த 2018ம் ஆண்டு காதலர் சந்தன் கவுடாவை திருமணம் முடித்த இவருக்கு 6 வருடங்களுக்கு பிறகு அண்மையில் தான் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. குடும்ப பொறுப்புகளின் காரணமாக நடிப்பிற்கு பிரேக் விட்டுள்ள நேஹா கவுடா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சிறுவயதில் தனக்கு நிகழ்ந்த பாலியல் ரீதியான தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார்.
அவரது பேட்டியில், ‛‛நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் வீட்டில் தூங்கி எழுந்த போது அம்மா வீட்டில் இல்லாததால் அவரை தேடி வெளியே வந்தேன். அப்போது பக்கத்து தெருவில் இருந்த ஒருவன் என் அப்பாவை நன்றாக தெரியும் என்று கூறி ஒரு வாட்ச் கடைக்குள் அழைத்து சென்று கதவை சாத்தினான். அங்கே என்னிடம் மிகவும் தப்பாக நடந்து கொண்டான். நான் பயத்தில் அழ ஆரம்பித்தேன். என்னிடம் கத்தியை காட்டி அழாதே என்று மிரட்டி, அடித்தான். ஒருவழியாக அவனிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டேன். அதன்பிறகு சில வருடங்கள் கழித்து ‛குட் டச் பேட் டச்' குறித்து ஆசிரியர் சொல்லி கொடுத்த போது தான், அன்று எனக்கு என்ன நிகழ்ந்தது என்பது எனக்கு புரிந்தது. அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.