21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' | 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'மீரா' | ரம்பாவுக்குப் பிறகு ரகுல் ப்ரீத்…இப்படி ஒரு கிளாமர் !! | நவம்பர் 7ல் சிறிய படங்களின் வெளியீடுகள் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட அறிவிப்புக்கு பிரம்மாண்ட விழா | இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! | ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்! | நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாவம் கணேசன்' தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை நேஹா கவுடா. கன்னடத்து வரவான இவர் ஸ்டார் சுவர்னா என்கிற கன்னட சேனலில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இருப்பினும் இவருக்கு தமிழ் மொழியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், 'பாவம் கணேசன்' விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில் நடிகை நேஹா கவுடா பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரியாகப் போகும் தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் நேஹா கவுடாவும் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 'பல அழகான நினைவுகளை பிக்பாஸ் வீட்டுக்குள் சேகரிக்க போகிறேன். திரித்து பேசும் வழக்கம் எனக்கு கிடையாது. அநாவசியமாக யாரிடமும் பேசமாட்டேன்' என கூறியுள்ளார்.
வைரலாகி வரும் அந்த வீடியோ பார்க்கும் ரசிகர்கள் தமிழ் பிக்பாஸ் 6வது சீசனுக்கான உத்தேச பட்டியலில் கூட நேஹா கவுடா பெயர் இல்லையே! எனவே, அவர் கலந்துகொள்ளப்போவது உண்மையா? பொய்யா? என குழம்பி போயுள்ளனர். நேஹா கவுடா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவது உண்மை தான். ஆனால், அவர் தமிழ் பிக்பாஸில் என்ட்ரி கொடுக்கவில்லை, கன்னடத்தில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் 9-ல் தான் அவர் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.