ஜனநாயகன் லீக் விவகாரம் ; தள்ளி வைக்கப்பட்ட சிரஞ்சீவி பட பூஜை | வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2' | 2026 : 100 நாட்களில் 75 படங்கள் ரிலீஸ் | 'ஜனநாயகன்' லீக் : பல நடிகர்கள் வேண்டுகோள், நடவடிக்கை எடுக்கப்படுமா? | ஜனநாயகன் படம் லீக் ; அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது : ரஜினிகாந்த் | சிக்ஸ் பேக் உடன் தயாராகும் தனுஷ் மகன் : ஜி.வி.பிரகாஷ் தந்த அப்டேட் | 'பெத்தி' படத்தில் இளம் நாயகி? | ஜனநாயகன் முழு படம் வெளியான விவகாரம்; அதிகரிக்கும் ஆதரவு குரல் | 15 நாள் சினிமா, 15 நாள் கார் ரேஸ் : அஜித் எடுத்த முடிவு | விஜய்யின் ரசிகர் கூட்டத்தை பார்த்து பிரமிப்பாக உள்ளது : கவுசல்யா |

மைதிலி என்னை காதலி படத்தில் நடித்த மோகன் காலமாகி உள்ளார். அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டி.ராஜேந்தர் வெளியிட்ட இரங்கல் செய்தி: 'மைதிலி என்னை காதலி' திரைப்படத்தில் என்னால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் மோகன் குமார். இவர் அற்புதமான நடிகர். நல்ல நடன கலைஞர். என்னுடைய 'மைதிலி என்னை காதலி' படத்திலும், 'எங்க வீட்டு வேலன்' படத்திலும் நடித்தவர். என்னுடைய இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்தவர்.
மைதிலி என்னை காதலி படத்தில் நடன திறமையாலும், நடிப்பாலும் கலக்கியவர், இன்றைக்கு என் இதயத்தை கலங்க வைத்துவிட்டு, அவர் விடைபெற்று சென்றுவிட்டார் என்ற செய்தி, என்னுடைய இதயத்தில் ஈட்டி போல் தாக்கியது. நெஞ்சமெல்லாம் சோகம். நீங்காத பாரம். அவரை இழந்து வாடக்கூடிய ரசிக பெருமக்களுக்கும், அவருடைய இல்லத்தாருக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.