கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது |
''நடிகர் விஷாலை திருமணம் செய்யப்போகிறேன். அவர் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ல் திருமணம்'' என்று நடிகை சாய் தன்ஷிகா அறிவித்துவிட்டார். ''தன்ஷிகாவின் சிரிப்பு பிடிக்கும். அவரை கடைசிவரை சந்தோசமாக வைத்து இருப்பேன். இனி மறைக்க எதுவும் இல்லை. நடிகர் சங்க கட்டட பணிகளை வேகப்படுத்த சொல்லிவிட்டேன்.. எனக்கு பெண் கிடைத்துவிட்டார்'' என்று நடிகர் விஷாலும் சொல்லிவிட்டார்.
சரி, இந்த காதல் மலர்ந்து எப்படி? இந்த காதலுக்கு வயது என்ன என்று விசாரித்தால், இதுவரை ஒரு படத்தில் கூட இருவரும் இணைந்து நடித்தது இல்லை. இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு அதிகம் இல்லை. நடிகர் சங்க பணிகளில், விஷால் டீமில் தன்ஷிகா பணியாற்றியது இல்லை. சில மாதங்கள்தான் இவர்கள் காதலில் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் இணைய டி.ராஜேந்தர்தான் ஒரு காரணம்.
2017ம் ஆண்டு தன்ஷிகா நடித்த 'விழித்திரு' படவிழாவில் சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்தர் கலந்துகொண்டார். அந்த மேடையில் டி.ஆர் பெயரை மறந்து போய், அவரை குறிப்பிடாமல் பேசினார் தன்ஷிகா. அவ்வளவுதான் மேடை நாகரீகம் தெரியாதா? என்னை மதிக்காமல் இருப்பதா என மேடையிலேயே பொங்கி தன்ஷிகாவை திட்டி தீர்த்தார் டி.ஆர். அந்த மேடையில் கண்ணீர் விட்டு கதறி அழுதும், மன்னிப்பு கேட்டும் தன்ஷிகாவை டி.ஆர் மன்னிக்கவில்லை.
இந்த விவகாரம் பெரிதானது. தன்ஷிகாவுக்கு ஆதரவாக பல நடிகர், நடிகைகள் குரல்கள் கொடுத்தனர். அப்போது நடிகர் சங்க தலைவராக இருந்த விஷால் தன்ஷிகாவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கைவிட்டார். அன்று முதல் நட்பு தொடங்கியது. பல பிரச்னைகளில், நிகழ்ச்சிகளில் தன்ஷிகா வீட்டுக்கே விஷால் சென்று வந்துள்ளார். சில மாதங்களில் அது காதலாக மாறியுள்ளது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.