பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

சினிமாவில் 30 ஆண்டுகளை தொடுவது, 30 ஆண்டுகளை தாண்டி இன்றும் வெற்றிகரமாக இருப்பது என்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அந்தவகையில் சினிமாவில் 30வது ஆண்டை தொட்டு இருக்கிறார் சுந்தர்.சி. அவர் இயக்கிய முதல் படமான 'முறைமாமன்' 1995ம் ஆண்டு வெளியானது. அதில் ஜெயராம், குஷ்பு நடித்து இருந்தனர்.
'அரண்மனை 4, மதகஜராஜா, கேங்கர்ஸ்' படங்களின் வெற்றிக்குபின் இப்போது நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்திஅம்மன் 2' படத்தை இயக்கி வருகிறார். சுந்தர்.சியின் கடைசி மூன்று படங்களுமே வர்த்தக ரீதியில் வெற்றி, தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்த படம். இப்போது இயக்கும் மூக்குத்திஅம்மன் 2, பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதில் அம்மன், போலீஸ் ஆபீசர் என 2 வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
30 ஆண்டை தொட்ட சுந்தர்.சிக்கு திரையுலகினர் வாழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் தங்கள் 25வது திருமண நாளை கொண்டாடிய குஷ்புவும், 'உங்கள் சினிமா வெறும் காமெடி மட்டுமல்ல, தமிழ் சினிமாவை பண்படுத்தியுள்ளது' என்று சுந்தர்.சி நடித்த படங்களின் முக்கியமான காட்சிகளை வெளியிட்டு அவர் காதல் மனைவி குஷ்புவும் வாழ்த்தியுள்ளார்.