ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி | பிளாஷ்பேக்: ரஜினி நடித்த 'ஏ' படங்கள் | பாடகர் வேடன் மீது குவியும் பாலியல் புகார்கள் | பிளாஷ்பேக்: ரீ பிக்அப் ஆன முதல் படம் | 'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை |
கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்தியதாக சொல்லி நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்கள். அதோடு அவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் நடிகை குஷ்புவிடத்தில் சினிமா துறையில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறதே என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், 3000 கிலோ போதை பொருள் சிக்கினால் அது எல்லாமே சினிமா துறையில் தான் பயன்படுத்தப்பட்டது என்று சொல்லுவதா? சினிமா துறையைச் சார்ந்த இரண்டு பேர் கைது ஆனதும் சினிமாவில் போதை பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டது என்று கதை கட்டி விடாதீர்கள். போதைப் பொருள் புழக்கம் என்பது எல்லா இடத்திலும் இருக்கிறது.
சினிமா நடிகர்களும் எல்லோரையும் போன்று மனிதர்கள் தான். அதனால் சினிமா துறையில் நடப்பதை மட்டும் பூதக்கண்ணாடி வச்சு பார்க்காதீங்க. ஒருவர் போதைப் பொருளுக்கு அடிமை ஆகிவிட்டார் என்றால், அவர் எதனால் அப்படி ஆனார் என்று யோசித்து பிரச்னைகளை தீர்க்க தான் பார்க்க வேண்டுமே ஒழிய அதை பெருசாக்கி பார்க்க கூடாது என்று காட்டமாக பதில் கொடுத்துள்ளார் குஷ்பு .