'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை | ‛தண்டகாரண்யம்' தலைப்புக்கு அர்த்தம் தெரியுமா? | அடுத்து வர இருக்கும் படங்களில் ‛மதராஸி' மட்டுமே டாப் | மீண்டும் இணைந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்? | நான்கு நாளில் ரூ.404 கோடி வசூலைக் கடந்த கூலி | பிளாஷ்பேக்: வித்தியாசமான சிந்தனையோடு 'வீணை' எஸ் பாலசந்தர் தந்த விளையாட்டு “பொம்மை” | இன்ஸ்டாவில் பின்தொடரும் ஏ.ஆர்.ரஹ்மான் ; மகிழ்ச்சியில் மஞ்சும்மேல் பாய்ஸ் இசையமைப்பாளர் | 25 நாட்களைக் கடந்த 'தலைவன் தலைவி' |
மலையாள நடிகையான நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றாலும் இந்து மதத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கிய நயன்தாரா தாங்கள் காதலித்து வரும்போதே அவருடன் சேர்ந்து பல இந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து பல பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்கள் மகன்கள் உயிர், உலக் உடன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்கள், அப்போது விக்னேஷ் சிவனும், மகன்களும் தரையில் சாஷ்டாங்கமாக படுத்து முருகனை வழிபட்டுள்ளார்கள். அதேபோல் நயன்தாரா முட்டி போட்டு அமர்ந்து முருகனை வழிபட்டுள்ளார். இது குறித்த புகைப்படம், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.