10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா அதிரடியான மாஸ், மசாலா படங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவரின் 111வது படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளார். வீரசிம்ஹாரெட்டி பட வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகிறது. இதனை விரிந்தி சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இது வரலாற்று பின்புலத்தில் பிரமாண்டமான ஆக் ஷன் படமாக உருவாகிறது. இன்று நடிகை நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் கதாநாயகியாக ராணி ஆக நயன்தாரா நடிக்கின்றார் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே பாலகிருஷ்ணா, நயன்தாரா இணைந்து சிம்மா, ஸ்ரீ ராம ராஜ்யம், ஜெய் சிம்மா ஆகிய படங்களில் நடித்திருந்தனர். இப்போது இந்த படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.