‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

பார்த்திபன் 'குடைக்குள் மழை' என்ற ஒரு படத்தை ஆரம்பித்தார். அந்தப் படத்திற்கு அழகான ஹீரோயின் ஒருவர் வேண்டும் என்று கேரளா சென்று ஆடிசன் நடத்தி தேர்வு செய்த நடிகை டயானா மரியம் குரியன்.
ஆனால் பார்த்திபன் படத்தை தொடங்க தாமதமாக, மரியாவும் வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். மரியமை சந்திக்க பார்த்திபன் நேரில் வரச் சொன்னார். ஆனால் அவர் மறுத்து, "நான் வேறொரு படத்தில் நடித்து வருகிறேன். அதை முடித்துவிட்டு வருகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
இதனால் கோபம் அடைந்த பார்த்திபன் உடனடியாக மதுமிதா என்ற தெலுங்கு நடிகையை வைத்து படத்தை ஆரம்பித்து விட்டார். அந்த மரியாதான் நயன்தாரா. பின்நாளில் நயன்தாராவை சந்தித்த பார்த்திபன் : "அன்று நீங்கள் என் படத்தில் நடித்திருந்தால் நானும் உங்களை வைத்து வேறு சில படங்களை இயக்கியிருப்பேன். ஆனால் நீங்கள் இந்த உயரத்தை தொட்டிருக்க முடியாது" என்றார்.