வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

அறிமுக இயக்குனர் மதன் இயக்கத்தில், 'டூரிஸ்ட் பேமிலி' பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமான படம் 'வித் லவ்'. அனஸ்வரா ராஜன், ஹரிஷ்குமார், காவ்யா அனில் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. சுமார் 40 கோடி வசூலித்ததாக சொல்லப்படும் இந்தப் படம் இந்த வாரம் மார்ச் 6ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிடுகிறார்கள். தியேட்டர்களில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ஓடிடி தளத்திலும் அப்படியான வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான படங்களில் தியேட்டர் வசூலில் அதிக வசூலைக் குவித்த படம் இதுதான். இந்த வருடத்தில் இதுவரையில் வெளியான படங்களில் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்திற்கு அடுத்து இந்தப் படம்தான் லாபத்தைக் கொடுத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இணைந்து தயாரித்தார். தான் பெற்ற முதல் வெற்றி இந்தப் படம் என அவர் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பேசியிருந்தார்.




