ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள 'யூத்' திரைப்படம் வருகின்ற மார்ச் 19ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு இந்தப் படத்திற்காக பேட்டி ஒன்று அளித்துள்ளனர். சுராஜ் இந்த படம் தவிர்த்து ரஜினியின் ஜெயிலர் 2 மற்றும் தனுஷின் கர படத்திலும் நடித்துள்ளார். அப்போது இந்த இரு படங்கள் குறித்து பேசி உள்ளார்.
அவர் கூறுகையில், "ஜெயிலர் 2 திரைப்படம் அருமையாக வந்திருக்கிறது. முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்கும். எனக்கு நீண்ட காலமாக ரஜினியை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், இந்தப் படத்தில் அவருடன் பணியாற்றவே வாய்ப்பு கிடைத்தது. ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினி சார் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் ஒரு வித்தைக்காரர்," என்றார்.
தனுஷ் பற்றி பேசும்போது, "தனுஷ் ஒரு ஸ்டார் நடிகர். அவர் ஒரு பக்கம் கமர்ஷியல் திரைப்படங்களும், மறுபக்கம் மரியான், அசுரன் போன்ற படங்களிலும் நடிக்கிறார். அவர் தற்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளார்" என்றார்.




