சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ல் வெளிவந்த 'கைதி' படத்தின் மூலம் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். அவருடைய வித்தியாசமான குரல் அவருக்கு மிகவும் பிளஸ் பாயின்ட்டாக அமைந்துள்ளது. 'மாஸ்டர், அநீதி, குட் பேட் அக்லி' ஆகிய படங்களில் அவருடைய நடிப்பும் பாராட்டப்பட்டது. தற்போது பவன் கல்யாண் நடித்து வரும் 'ஓஜி' தெலுங்குப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.
பவன் கல்யாண் நடித்து ஜுலை 24ல் வெளியாக உள்ள 'ஹரிஹர வீரமல்லு' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. அதில் ஆரம்பத்திலேயே அர்ஜுன் தாஸின் பின்னணிக் குரல் டிரைலருக்கு ஒரு தனித்துவத்தைக் கொடுத்துள்ளது.
அது குறித்து, “பவன் கல்யாண் காரு, அவரது பட டிரைலருக்கு எனது குரலைக் கேட்கும் போது ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை. இது உங்களுக்கானது சார்,” என அவரை 'டேக்' செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதற்கு பவன் கல்யாண், “அன்பு சகோதரர், அர்ஜுன் தாஸ், நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மிக அரிதாகவே நான் ஒரு உதவி கேட்டேன். என் உதவியைக் கருத்தில் கொண்டதற்கு நன்றி. உங்கள் குரலில் ஒரு மேஜிக்கும், மெலடியும் இருக்கிறது,” என்று பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.