'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை | ‛தண்டகாரண்யம்' தலைப்புக்கு அர்த்தம் தெரியுமா? | அடுத்து வர இருக்கும் படங்களில் ‛மதராஸி' மட்டுமே டாப் | மீண்டும் இணைந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்? | நான்கு நாளில் ரூ.404 கோடி வசூலைக் கடந்த கூலி | பிளாஷ்பேக்: வித்தியாசமான சிந்தனையோடு 'வீணை' எஸ் பாலசந்தர் தந்த விளையாட்டு “பொம்மை” | இன்ஸ்டாவில் பின்தொடரும் ஏ.ஆர்.ரஹ்மான் ; மகிழ்ச்சியில் மஞ்சும்மேல் பாய்ஸ் இசையமைப்பாளர் | 25 நாட்களைக் கடந்த 'தலைவன் தலைவி' |
கன்னடத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான 'நான் ஈ' சுதீப் நடிக்க உள்ள அவரது 47வது படத்தை கடந்த வருடம் சுதீப் வெளிவந்து வெற்றி பெற்ற 'மேக்ஸ்' படத்தை இயக்கிய விஜய் கார்த்திகேயா இயக்க உள்ளார்.
இந்தப் படத்தை தமிழ் இயக்குனரான சேரன் முதலில் இயக்குவராக இருந்தது. தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு சுதீப்பின் பிறந்தநாளில் வெளியானது.
சில காரணங்களால் சேரன் - சுதீப் கூட்டணி இணைந்து பணியாற்ற முடியவில்லை என்று சொல்கிறார்கள். அதனால், தான் விஜய் கார்த்திகேயவை அந்தப் படத்தை இயக்கும்படி ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
சுதீப் தற்போது 'பில்லா ரங்கா பாட்ஷா' என்ற கன்னடப் படத்தில் நடித்து வருகிறார். சேரன் வேறு ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் உள்ளாராம்.