சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
கன்னட திரையுலகில் நடிகர் ராஜ்குமாருக்கு அடுத்ததாக மரியாதைக்குரிய நபராக ரசிகர்களால் மட்டுமல்ல, திரையுலகை சேர்ந்தவர்களாலும் போற்றப்படுபவர் நடிகர் விஷ்ணுவர்தன். தனது 37 வருட சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்த விஷ்ணுவர்தன் கடந்த 2009 ஆம் வருடம் காலமானார். அவர் நினைவாக பெங்களூருவில் உள்ள அபிமன் ஸ்டுடியோவில் அவருக்கு ஒரு நினைவிடம் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வேறுசில கட்டடங்களின் கட்டுமான காரணங்களுக்காக ஒரே இரவில் அந்த நினைவிடம் இடிக்கப்பட்டுள்ளது.
இது விஷ்ணுவர்தன் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரிடமும் கூட அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நடிகர் கிச்சா சுதீப் கூறும்போது, “விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிக்கப்பட்டது இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. நான் கிச்சாவாக பேசவில்லை. அவரது ஒரு ரசிகனாக மிகப்பெரிய அளவில் புண்பட்டு இருக்கிறேன். அதேசமயம் விஷ்ணுவர்தன் எப்போதுமே சொல்வதுண்டு, “இறந்தாலும் நான் ஏதோ ஒரு கட்டடத்துக்குள் அடைந்து கிடக்க விரும்ப மாட்டேன். இல்லையென்றால் ஒரு அசையாத பொருளாக இருக்க மாட்டேன். வேறு ஐந்து விதமான வடிவங்களாக நான் உணரப்படுவேன். நாம் இயற்கையை சேர்ந்தவர்கள் என்று அவ்வப்போது கூறுவார்.
ஒரு வகையில் அவரது அந்த விருப்பம் இப்போது நிறைவேற்றப்பட்டிருந்தாலும் கூட சாதாரண ரசிகர்களும் மக்களும் இதை புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் ஒரு கடிதம் அனுப்புவதற்கு தபால் பெட்டி எப்படி தேவையோ அதே போலத்தான் நம் பிரார்த்தனைகளை மரியாதையை செலுத்துவதற்கு ஒரு நினைவிடம் தேவை” என்று கூறியுள்ளார்.
நடிகர் ரிஷப் ஷெட்டியும், “விஷ்ணுவர்தன் நினைவிடம் இடிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. அவரது பெர்சனாலிட்டியையும் கலைக்கு அவர் செய்த பணிகளையும் அவமானப்படுத்துவது போல இருக்கிறது” என்று கூறியுள்ளார்.