போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

மோகன்லால் நடிப்பில் கடந்த 2024ல் மலையாளத்தில் வெளியான படம் மலைக்கோட்டை வாலிபன். வித்தியாசமான கதைக்களங்களில் படம் இயக்குபவர் என பெயர் பெற்ற இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்த படத்தை இயக்கியிருந்தார். வரலாற்று பின்னணியில் புனைவு கதையாக உருவாகியிருந்த இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானாலும் தோல்வி படமாக அமைந்தது.
சமீபத்தில் கூட இந்த படத்தின் தயாரிப்பாளர், இந்த படத்தை இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இரண்டாம் பாகமாக எடுக்க விரும்பினார் என்றும் அதில் தனக்கும் மோகன்லாலுக்கும் விருப்பமில்லை என்றும் அதுவும் கூட இந்த படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த படம் ஜப்பானிய மொழியில் மாற்றப்பட்டு வரும் ஜனவரி 17ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த தகவலை இந்த இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.