மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

மலையாள திரையுலகில் மோகன்லால், இயக்குனர் பிரியதர்ஷன் கூட்டணி அதிக படங்களில் இணைந்து பணியாற்றிய சாதனையை செய்தவர்கள் என்கிற பெருமையை தக்க வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 33 படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர். விரைவில் தனது நூறாவது படத்தை இயக்க இருக்கிறார் பிரியதர்ஷன். அந்த படத்தில் மோகன்லால் தான் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த நிலையில் அதற்கு முன்பாகவே கேரள அரசு போக்குவரத்து புரமோஷனுக்காக விளம்பர படம் ஒன்றை மோகன்லாலை வைத்து இயக்கியுள்ளார் பிரியதர்ஷன். தன்னுடைய சினிமா பயணத்துக்கான தேடலும் துவக்கமும் கேரள அரசு பேருந்து பயணத்தின் மூலம்தான் கிடைத்தது என்றும் அரசு பேருந்து பயணங்களை மேற்கொள்ளுங்கள் என்றும் அந்த விளம்பர படத்தில் மோகன்லால் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக பேசியுள்ளார்.