பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க இருந்த கதையில் நடிகர் ரஜினிகாந்த் | அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது |

மலையாள குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரான கலாபவன் மணி மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் தனது வித்தியாசமான நடிப்பால் மகிழ்வித்தவர். தமிழில் ஜெமினி, வேல், எந்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் கடந்த 2006ம் வருடம் மார்ச் மாதம் திடீரென காலமானார். அவருக்கு நிம்மி என்கிற மனைவியும் ஸ்ரீலட்சுமி என்கிற மகளும் இருக்கின்றனர். கலாபவன் மணி இறந்தபோது பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருந்த ஸ்ரீ லட்சுமி, தற்போது மருத்துவ படிப்பை முடித்து பணியாற்ற தயாராகி விட்டார். இந்த தகவலை கலாபவன் மணியின் சகோதரரான ராமகிருஷ்ணன் என்பவர் தற்போது தெரியப்படுத்தியுள்ளார்.
கலாபவன் மணிக்கு தனது சொந்த ஊரான சாலக்குடி பகுதியில் ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதும் ஏழைகளுக்கு அதில் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. அதை பல பேட்டிகளிலும் அவர் கூறியிருக்கிறார். அதேபோல தனது மகளை அதற்காகவே டாக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என்கிற ஆசையும் அவருக்கு இருந்தது. அந்த வகையில் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக மருத்துவராகியுள்ளார் மகள் ஸ்ரீ லட்சுமி.




