'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் |

கேரள அரசின் சார்பில் மலையாள திரை உலகில் கடந்த பல வருடங்களாக 'சித்ராஞ்சலி ஸ்டுடியோ' திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்த ஸ்டுடியோவை நவீனமயமாக்க புதுப்பிக்கப்படும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிந்துள்ள நிலையில் நேற்று இதன் துவக்க விழா அரசு சார்பில் நடைபெற்றது. ஆனால் ஆச்சரியமும் அதிர்ச்சியும் தரும் விதமாக மலையாள திரை உலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் என எந்த ஒரு சங்கத்தை சேர்ந்தவர்களும் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.
காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வலியுறுத்தி அவை நிறைவேற்றப்படாத காரணத்தால் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக மலையாள திரையுலகம் அறிவித்தது. அதன் பிறகு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு அளித்த வாக்குறுதியை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டது. ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டிலும் திரையுலகம் சார்பான கோரிக்கைகள் எதையும் தீர்க்கும் விதமாக அறிவிப்புகள் இல்லை. இதனால் தங்களை ஒதுக்கும் கேரள அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாகத்தான் தற்போது இந்த சித்ராஞ்சலி ஸ்டுடியோ திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் மலையாள சங்கங்கள் புறக்கணித்துள்ளன என்கிற தகவல் வெளியாகி உள்ளது.