Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து

08 மார், 2026 - 11:10 IST
எழுத்தின் அளவு:
Worth,-Worth,-Worth---Parthibans-Womens-Day-greetings
Advertisement


தமிழ்த் திரையுலகத்திலும், அரசியல் உலகத்திலும் கடந்த சில நாட்களாக, விஜய் - சங்கீதா பிரிவும், விவாகரத்தும், விஜய் - த்ரிஷா ஒன்றாக திருமண நிகழ்வில் கலந்து கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின நிகழ்ச்சியில் பேசிய விஜய், “சமீபத்துல இருக்கிற நிறைய பிரச்னைகள்ல, சில பிரச்னைகள் ஓடிட்டு இருக்குல்லயா, அதுக்கு நீங்க போராடி, மனசு உடஞ்சு போறத பார்க்கிறேன். அதைப் பார்த்து எனக்கு வலிக்குது. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன், நானும் நீங்களும் சேர்ந்து மக்களோட பிரச்னைகளை மட்டும் பார்ப்போம். அதுக்கெல்லாம் மனசு உடஞ்சு போகாதீங்க, அது 'வொர்த்' லாம் கிடையாது,” என்றார்.

அந்த 'வொர்த்' என்ற வார்த்தை வழக்கம் போல டிரெண்டாகி, டிரோல்களாகி சமூக வலைத்தளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

விஜய்யின் நடவடிக்கை, பேச்சு குறித்து திரையுலகினரும் இப்போது வெளிப்படையாக கமெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இது “வொர்த், வொர்த், வொர்த்', ஏனென்றால் இந்த பெண்கள் மற்றுமொரு எர்த் (பூமி). பூமியை நாம் பூமாதேவி என்றே அழைக்கிறோம். சாமா நாதன் என்று ஆணின் பெயர் கொண்டு அழைப்பதில்லை. எவனோ ஈவன் (even), அவன் எமனோ அவனை ஈன்றதும் ஒரு பெண்ணே, சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு வுமன்-ஏ. இனிய மகளிர் தினம்,” என வாழ்த்தியுள்ளார்.

'வொர்த் என்ற டிரெண்ட்டில் டிரோலையும் வாழ்த்தையும் சேர்த்து அவரது ஸ்டைலில் ஒரு பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்திஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான ... அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? அதிக சம்பளம் பெறும் நடிகர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap