மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

மலையாள குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரான கலாபவன் மணி மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் தனது வித்தியாசமான நடிப்பால் மகிழ்வித்தவர். தமிழில் ஜெமினி, வேல், எந்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் கடந்த 2016ம் வருடம் மார்ச் மாதம் திடீரென காலமானார். அவருக்கு நிம்மி என்கிற மனைவியும் ஸ்ரீலட்சுமி என்கிற மகளும் இருக்கின்றனர். கலாபவன் மணி இறந்தபோது பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருந்த ஸ்ரீ லட்சுமி, தற்போது மருத்துவ படிப்பை முடித்து பணியாற்ற தயாராகி விட்டார். இந்த தகவலை கலாபவன் மணியின் சகோதரரான ராமகிருஷ்ணன் என்பவர் தற்போது தெரியப்படுத்தியுள்ளார்.
கலாபவன் மணிக்கு தனது சொந்த ஊரான சாலக்குடி பகுதியில் ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதும் ஏழைகளுக்கு அதில் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. அதை பல பேட்டிகளிலும் அவர் கூறியிருக்கிறார். அதேபோல தனது மகளை அதற்காகவே டாக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என்கிற ஆசையும் அவருக்கு இருந்தது. அந்த வகையில் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக மருத்துவராகியுள்ளார் மகள் ஸ்ரீ லட்சுமி.