Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார்

08 மார், 2026 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Sivarajkumar-voiced-his-support-for-the-Kantara-actress
Advertisement


கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான 'காந்தாரா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சப்தமி கவுடா. இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் கூட நடித்து வருகிறார் சப்தமி கவுடா. சமீபத்தில் இவர், “பல விழாக்களுக்கு நடிகைகள் வருகை தரும்போது சில புகைப்படக்காரர்கள் தேவையில்லாத ஆபாசமான கோணத்தில் புகைப்படங்களை எடுத்து அவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். நாங்களும் பெண்கள் தான்.. நடிப்பு எங்களுக்கு ஒரு தொழில்.. எங்கள் கலையை விட எங்கள் உடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. இது வெட்கக்கேடானது. இது ஏற்றுக் கொள்ளவும் முடியாதது. எங்களுக்கும் அடிப்படை மரியாதை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ் குமார், சப்தமி கவுடாவின் கருத்துக்கு ஆதரவாக தனது குரலை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர்கள் ஒன்றும் பொருட்கள் அல்ல.. இன்றும் கூட பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் என்று மக்களிடம் சொல்ல வேண்டிய துரதிஷ்டமான நிலை தான் இருக்கிறது. தயவுசெய்து எந்த விதத்திலும் சமரசப்படுத்திக் கொள்ளாத வகையில் பெண்களுக்கான மரியாதையை உறுதி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண்'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு ... 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap