மீண்டும் வெளியாகிறது 'அமர்க்களம் ' | சோலோ ஹீரோயினாக சாக்ஷி அகர்வாலின் திரில்லர் படம் | பிளாஷ்பேக் : மகனை அறிமுகப்படுத்திய கேஎஸ் கோபாலகிருஷ்ணன் | ஏப்ரல் 17ல் 4 படங்கள் ரிலீஸ் | பிளஷ்பேக் : 2 வண்ண தொழில்நுட்பத்தில் தயாரான அதிசயப்பெண் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'முட்ட கலக்கி' | 'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி |

சுராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் மேஷ் ரெட்டி தயாரித்துள்ள படம் '45'. சிவராஜ்குமார், உபேந்திரா, சுதாராணி, பிரமோத் ஷெட்டி நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் அர்ஜுன் ஜான்யா இயக்கி உள்ளார். ராஜ்.பி.ஷெட்டி இசை அமைத்துள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 2026 ஜனவரி 1ம் தேதி வெளியாகிறது.
இதை முன்னிட்டு நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவராஜ்குமார் பேசியதாவது: இது எனது 129வது படம். என் முதல் படமான 'ஆனந்த்' செய்தபோது இருந்த அதே பயமும் பக்தியும் இந்தப் படத்திலும் எனக்கு இருந்தது. அர்ஜுன் ஜான்யா கதையை சொன்னபோது எப்படி இப்படி ஒரு கதையை உருவாக்கினார் என மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
'45' என்பது ஒரு நாள், ஒரு நிமிடம், ஒரு விநாடி என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும். இது ஒரே மனிதனின் கதை அல்ல, அனைவரையும் இணைக்கும் படம். கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கியபோது, நான் கீமோதெரபியில் இருந்தேன். ஒரு இயக்குனர் உருவாக்கியதை கலைஞன் முழுமையாக செய்தால்தான் அதற்கு மதிப்பு கிடைக்கும் அது டூயட் பாடலாக இருந்தாலும், கழிவறை சுத்தம் செய்வதாக இருந்தாலும். நாங்கள் இயக்குனரின் கனவை முழுமையாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.




