'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்துள்ள 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். 1960களில் மாணவர்கள் நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.
படத்தின் கதை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கதை பற்றி இயக்குனர் சுதா கொங்கரா கூறியிருப்பதாவது: இது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் கதைதான். 1960கள் எப்படி இருந்தது என்பதை இந்த தலைமுறைக்கும் காட்டும் படம்தான். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடந்த மிகப்பெரிய போராட்டம் அது. பல மறைக்கப்பட்ட உண்மைகளையும் படம் பேசுகிறது.
சிவகார்த்திகேயனும், அதர்வாவும் அண்ணன் தம்பிகள், மதுரையை சேர்ந்தவர்கள். சிவகார்த்திகேயன் அரசு வேலையில் இருக்கிறார். அதர்வா என்ஜினீயருக்கு படிக்கிறார். இருவரும் பாசத்தோடு இருந்தாலும் இரு வேறு கொள்கைகளை கொண்டவர்கள். அவர்களுக்கு கருத்து மோதல்கள் இருக்கிறது. சிவா அமைச்சர் மகள் ஸ்ரீலீலாவை காதலிப்பார். சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் இந்த 3 பேர் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதுதான் படம்.
ஏராளமான ஆய்வுகள் செய்து, கடந்த 5 ஆண்டுகளாக இதற்காக பணியாற்றி படம் உருவாகி உள்ளது. ரவிமோகன் வில்லனாக நடிக்கிறார். அவருக்கும், சிவாவுக்கும் ரியலான சண்டை காட்சிகள் இருக்கிறது. ஸ்ரீலீலா டாக்டருக்கான தேர்வு எழுதிக்கொண்டே இந்தப் படத்தில் நடித்தார். என்கிறார் சுதா கொங்கரா.