ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளில், பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் கலந்துகொண்டார். அப்போது மேடையில் இருந்த, 'காந்தாரா' படத்தின் இயக்குனரும், ஹீரோவுமான ரிஷப் ஷெட்டி முன்னிலையில், படத்தில் அடிக்கடி வரும் சாமியின் அலங்கார ஒலியான 'ஓ...' என்பதை செய்து காட்டி கடலோர கர்நாடக மக்களால் மதிக்கப்படும் பஞ்சுருளி மற்றும் குலிகா தெய்வங்களின் பாவனைகளை கேலி செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், சவுண்டி தெய்வத்தை 'பெண் பேய்' என்று அவர் வர்ணித்ததாகவும், தெய்வீக கலை வடிவத்தை கிண்டல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிறகும் கூட, தொடர்ந்து ரன்வீர் சிங் கிண்டல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ரன்வீர் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் சவுண்டி சிங் பிரசாந்த் மேதல் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள புகார் மனுவில், 'ரன்வீர் சிங்கின் செயல் திட்டமிட்டது, மற்றும் வன்மமானது. நீதி மற்றும் பாதுகாப்பின் வடிவமாக திகழும் காவல் தெய்வத்தை 'பேய்' என்று சொன்னது, இந்துக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் செயலாகும்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த பெங்களூரு 1வது கூடுதல் தலைமை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்ய ஹை கிரவுண்ட்ஸ் காவல் நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை, வரும் ஏப்ரல் 8ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.