மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

மலையாள சினிமாவில் அதிகமான காமெடி படங்களில் நடித்த முன்னணி ஹீரோ மோகன்லால். அவரும் சீனிவாசனும் இணைந்து நடித்த அத்தனை காமெடி படங்களும் வெற்றி பெற்றிருக்கிறது. அவற்றில் ஒன்று 'நாடோடிக்காற்று'. இந்த படத்தை முக்தா பிலிம்ஸ் தமிழில் 'கதாநாயகன்' என்ற பெயரில் ரீமேக் செய்தது.
இதில் மோகன்லால் நடித்த கேரக்டரில் பாண்டியராஜனும், சீனிவாசன் நடித்த கேரக்டரில் எஸ்.வி.சேகரும் நடித்தனர். இவர்கள் தவிர ரேகா, ஷோபனா, எஸ்.எஸ்.சந்திரன், மனோரமா ஆகியோரும் நடித்தனர். முக்தா சீனிவாசன் இயக்கினார். மலையாள படத்தை சத்தியன் அந்திக்காடு இயக்கி இருந்தார்.
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் இரண்டு இளைஞர்களை ஒரு மோசடி நிறுவனம் துபாயில் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்று கேரள பகுதியில் கொண்டு படகில் இறக்கி விட்டு விடும் அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை காமெடியாக சொன்ன படம்.