ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் |

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்து வெளிவந்த படங்கள் 'திரிஷ்யம் 1, 2'. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு மலையாளத்தில் திரிஷ்யம் 3ம் பாகம் ரிலீஸூக்கு தயாராக உள்ளது. இதன் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் பணிகளும் மறுபுறம் நடைபெற்று வருகிறது.
திரிஷ்யம் 3ம் பாகத்தின் மலையாள பதிப்பு முதலில் வருகின்ற ஏப்ரல் 2ந் தேதியன்று திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், ஐக்கிய அரபு நாடுகளில் போர் சூழல் நிலவியுள்ளதால் மலையாள சினிமாவிற்கு முக்கியமான மார்க்கெட் ஐக்கிய அரபு நாடுகள் தான், இதனால் ஏப்ரல் 2ம் தேதியன்று திர்ஷ்யம் 3 படம் குறிப்பிட்ட தேதியில் திரைக்கு வரவில்லை என அறிவித்தனர். இதைத் தொடர்ந்து இப்படம் வருகின்ற மே 21ம் தேதியன்று மோகன்லாலின் 66வது பிறந்தநாளில் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.