புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

சினிமா பிரபலங்கள் பலரும், தங்களது பெயர், புகைப்படம் ஆகியவற்றை எந்தவிதமான அனுமதியும் வியாபார நோக்கில் பிறர் பயன்படுத்துவதற்குத் தடை வாங்கி வருகிறார்கள்.
'பர்சனாலிட்டி ரைட்ஸ்' என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த 'ஆளுமை உரிமை' கோரும் அடுத்த சினிமா பிரபலமாக நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார். இது தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது எனத் தகவல்.
இதற்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் கமல்ஹாசன், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், ஹிந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப், அக்ஷய்குமார், சல்மான் கான், அபிஷேக் பச்சன், மாதவன், இயக்குனர் கரண் ஜோஹர், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பவன் கல்யாண், மகேஷ்பாபு, நாக சைதன்யா, ஜுனியர் என்டிஆர் ஆகியோர் இப்படி தங்களது 'ஆளுமை உரிமை'யைப் பெற்றுள்ளார்கள்.




