Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: நாடகத்தால் வெற்றி பெற்ற படம்

21 பிப், 2026 - 11:41 IST
எழுத்தின் அளவு:
Flashback-A-film-that-triumphed-with-drama
Advertisement

பிரபல தெலுங்கு இயக்குனர் சே.நாராயணமூர்த்தி இயக்கிய படம் 'அன்னையின் ஆணை'. சிவாஜி 2 வேடங்களில் நடித்த படங்களில் முக்கியமானது. அவருடன் சாவித்ரி, நம்பியார், எஸ்.வி.ரங்காராவ், எம்.என்.ராஜம், பண்டரிபாய் உள்ளிட்ட பலர் நடித்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தார். தந்தையை கொன்றவனை கண்டுபிடிக்கும் மகனின் கதைதான் என்றாலும் அதை புதிய கோணத்தில் சொன்ன வகையில் இந்த படம் தனித்து நின்றது.

அப்போதெல்லாம் சிவாஜி நடிக்கும் முக்கிய படங்களில் படத்திற்குள் அவர் ஒரு சரித்திர நாடகத்தில் நடிப்பது வழக்கம். அப்படி இந்தப் படத்தில் அவர் சாம்ராட் அசோகனாக நடித்திருந்தார். சிவாஜி சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மேடையில் அதிகம் நடித்த நாடகங்களில் இதுவும் ஒன்று. அந்த நாடகத்தின் முக்கிய காட்சியான போர்களத்தில் நிற்கும் அசோகருக்கு அங்கு வரும் புத்த துறவி போரின் கொடுமையையும, உயிர்களின் மகத்துவத்தையும் எடுத்துரைப்பார் அதன் பிறகு அசோகர் புத்த மதத்தை ஏற்பார். இந்த காட்சி படத்தில் இடம்பெற்றது.

இந்த நாடகத்தை பார்ப்பதற்காகவே 'அன்னையின் ஆணை' படத்திற்கு மக்கள் படையெடுத்தார்கள். நாடகம் முடிந்ததும் எழுந்து போய்விடுவார்கள். இதனால் படத்தை வெளியிட்ட பல தியேட்டர்கள். 'சாம்ராட் அசோகன் நாடகம் இரண்டு முறை திரையிடப்படும்' என்று விளம்பரம் செய்தார்கள். படத்தோடு ஒரு முறையும் படம் முடிந்த பிறகு ஒரு முறையும் நாடகத்தை திரையிட்டடார்கள். இந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன்… தொடரும் காதல்??துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன்… ... பிளாஷ்பேக் : மோகன்லால் கேரக்டரில் நடித்த பாண்டியராஜன் பிளாஷ்பேக் : மோகன்லால் கேரக்டரில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap