'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் நடித்து வரும் ரெஜினா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததுமே மிகப் பெரிய மகிழ்ச்சி அடைந்தேன். அந்த படத்தில் ஒரு அதிரடியான வில்லி வேடம் கிடைத்திருந்தது. அந்த வேடத்தில் நடித்த போது பல தருணங்களில் எனது நடிப்பை அஜித் மனம் திறந்து பாராட்டினார். அவரது இந்த பாராட்டு அவருடன் பணியாற்றும் கலைஞர்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது. அதோடு பெண்களை மரியாதையுடன் நடத்த கூடியவர் அஜித். அவருடன் இணைந்து நடித்த அந்த தருணம் அருமையானது. அந்த அளவுக்கு அனைவரிடத்திலும் எந்தவித ஈகோ பார்க்காமல் சகஜமாக பழகக் கூடிய ஒரு அற்புதமான நடிகர் அஜித்'' என்று கூறியிருக்கிறார் ரெஜினா.