மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

மலையாள நடிகையான கோபிகா ரமேஷ், ஐடன்டிட்டி, வாங்கு, பிரிலூர் பிரிமியர் லீக். தண்ணீர் மதன் தினங்கள் படங்களில் நடித்தார். தமிழில் ஸ்வீர்ட் ஹார்ட் படம், சுழல் வெப் தொடரில் நடித்தார். தற்போது சந்தானம் ஜோடியாக 'சந்தா 20' படத்தில் நடிக்கிறார். ரெடின் கிங்ஸ்லி, ஜார்ஜ் மரியன், பிரதீப் ஆண்டனி, ஜென்சன் திவாகர், டிஎஸ்ஆர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை வீனஸ் இன்போடெய்ன்மென்ட் சார்பில் கே.ஜே.கணேஷ், மற்றும் கே7 ஸ்டுடியோஸ் சார்பில் விஜய் கே. செல்லையா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது “மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் கலவையைக் கொண்ட படமாக தயாராகிறது. ஒரு துப்பு துலக்கும் நிபுணரை மையப்படுத்தி தயாராகிறது. அவர் ஒரு குற்றத்தை கண்டறிய தொடங்குகிறார். இது அவரை எதிர்பாராத வகையில் சாகசமும் , சிலிர்ப்பூட்டும் பயணத்திலும் ஆழ்த்துகிறது. வலிமையான தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்புடன் காட்சி ரீதியாகவும் வளமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தயாராகிறது” என்றார்.