Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ?

07 மார், 2026 - 03:46 IST
எழுத்தின் அளவு:
Is-Sangeetas-new-petition-a-retaliation-for-coming-as-a-couple-for-the-wedding
Advertisement

தமிழக அரசியல் களத்தையும், திரையுலகத்தையும் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக வைத்திருப்பவர் நடிகர் விஜய். அவரிடமிருந்து விவகாரத்து கோரி அவரது மனைவி சங்கீதா அளித்த மனு கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கு விசாரணை ஆரம்பமாகும் வரையில் விஜய் அமைதி காப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இரு தினங்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பாளர் குடும்ப திருமணம் ஒன்றில் விஜய், த்ரிஷா இருவரும் ஒரே காரில், ஒரே நிறத்தில் ஆடை அணிந்து வந்தது அந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர். அது சார்ந்த செய்திகள் அடங்குவதற்கு முன்பே அதற்கு பதிலடி தரும் விதத்தில் தான் விஜய் மனைவி சங்கீதா தங்குவதற்கு வீட்டில் அனுமதிக்க வேண்டும் என்று புதிய மனுவை அளித்திருப்பார் என்று பேச ஆரம்பித்துள்ளார்கள்.

விஜய் குடும்பத்தினர் முதலில் சென்னை சாலிகிராமத்தில் வசித்தனர். அங்கிருந்து விஜய் அவரது மனைவியுடன் அடையாறு இந்திரா நகர் பகுதியில் குடியேறினார். அங்கிருந்து நீலாங்கரையில் ஒரு பிரம்மாண்ட பங்களாவைக் கட்டி அங்குதான் மனைவி, மகன், மகளுடன் வசித்து வந்தார்.

கடந்த சில வருடங்களாக அனைவருமே தனித் தனியாக வெவ்வேறு இடங்களில் வசித்து வருவதாகச் சொல்கிறார்கள். நீலாங்கரை வீட்டில் விஜய் மட்டும் இருக்கிறார். அவரது மனைவி சங்கீதா லண்டனில் வசிக்கிறார். மகன் அசோக் நகர் பகுதியில் தனி பிளாட் வீடு ஒன்றில் இருக்கிறார். மகள் பிஜி ஹாஸ்டலில் இருக்கிறார் என்பதுதான் தகவல்.

தற்போது தனது கணவர் விஜய்யுடன் வசித்த நீலாங்கரை வீட்டில் தங்குவதற்கு அனுமதி கேட்டுத்தான் சங்கீதா மனு செய்துள்ளார். விஜய் பனையூரில் கட்சி அலுவலகத்தை நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாது கடற்கரை அருகில் பட்டினப்பாக்கத்தில் உள்ள அவருடைய விலையுயர்ந்த பிளாட் வீடு ஒன்றிற்கும் அடிக்கடி சென்று வருவார். நீலாங்கரை வீட்டில் சங்கீதா வசிக்க அனுமதி கிடைத்தால் விஜய் பட்டினப்பாக்கம் வீட்டிற்கு செல்ல வாய்ப்புகள் அதிகம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்புசிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் ... ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap