மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

மலையாளத்தில் பெரும்பாலும் வாரிசு நடிகர்கள் மட்டுமே அறிமுகமாகி வந்த நிலையில் சமீப காலமாக வாரிசு நடிகைகளும் களத்தில் இறங்கி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி தென்னிந்திய அளவில் தற்போது இளம் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து தற்போது நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மாயாவும் கதாநாயகியாக களம் இறங்கியுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான ‛2018' என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் உருவாகும் ‛தொடக்கம்' என்கிற படத்தில் விஸ்மயா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தொடக்கம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. வரும் ஓணம் பண்டிகை ரிலீஸ் ஆக இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.