தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் | பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங்' படப்பிடிப்பு நிறைவு | ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் |

பாலிவுட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குறிப்பிடத்தக்க முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் விக்ரம் பட். முன்னணி நடிகர்களை வைத்து முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இவர் மீது டாக்டர் அஜய் மர்த்தியா என்பவர், விக்ரம் பட் தன்னிடம் படம் தயாரிப்பதற்காக ஆரம்பத்தில் 7 கோடி ரூபாயை தரச் சொல்லி பெற்றுக்கொண்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தவறான டாக்குமென்ட்களை காட்டி 30 கோடி ரூபாய் வரை மோசடி செய்து விட்டார் என புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் விக்ரம் பட் மற்றும் அவரது மனைவி ஸ்வேதாம்பரி பட் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை அவரது மனைவி ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது 70 நாள் சிறைவாசத்திற்கு பிறகு விக்ரம் பட்டும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரது சிறைவாசம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், “நான் கிருஷ்ணனின் தீவிர பக்தன். அதனால் சிறை என்பது எனக்கு ஐந்தாவது வீடு போல. என்னைப் பற்றி தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டு என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுதியில் உண்மை வெல்லும்” என்று கூறியுள்ளார்.