'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

பிரபல பாலிவுட் நடிகர் ராம்பால் பற்றிய செய்திதான் கடந்த சில தினங்களாகவே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் நடிகர் ராம்பால் கடந்த 2010ல் ஆட்டா பாட்டா லாபாட்டா என்கிற படத்தை தயாரித்து இயக்கினார். இதற்காக அவர் பைனான்சியர் ஒருவரிடம் ஐந்து கோடி கடன் வாங்கி இருந்தார். அந்த படம் சரியாக போகாத நிலையில் வட்டியுடன் சேர்த்து 9 கோடி ரூபாய் திரும்ப செலுத்த வேண்டிய நிலையில் அவர் பைனான்சியருக்கு கொடுத்த காசோலை பணம் இன்றி திரும்பியது.
இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பெயரில் ராம்பால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் உதவிக்கரம் நீட்ட முன் வந்துள்ளனர். இந்த நிலையில் மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் ராம்பாலுக்கு தன்னால் இயன்ற வகையில் பொருளாதார உதவியை ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி பாலிவுட்டில் பிரியதர்ஷன் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ராம்பால் தான் வில்லனாக ஒப்பந்தம் செய்திருந்தார்.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரிடம் ராம்பாலுக்கு ஏற்கனவே பேசப்பட்ட சம்பளத்தை விட அதிகமான தொகையை சம்பளமாக தர வேண்டும் என்றும் அது அவரது கடன் பிரச்சினையை ஓரளவு சமாளிக்க உதவும் என்றும் கோரிக்கை வைத்தார் பிரியதர்ஷன். இந்த கோரிக்கையை தயாரிப்பாளரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது குறித்து இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது, “எனக்கு ராம்பால் யாதவை 20 வருடங்களாக நன்றாகவே தெரியும். அவர் ஒரு நல்ல மனிதர். அவரது போதிய கல்வி அறிவின்மை காரணமாகத்தான் இந்த சிக்கலில் தெரியாமல் மாட்டிக் கொண்டார். அவர் சிறையில் இருந்து மீண்டு வர, அவரது கடனை அடைக்க இயன்ற உதவியை செய்வோம்” என்று கூறியுள்ளார்.