விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

தெலுங்கு திரையுலகில் கடந்த பத்து வருடங்களாக தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு வளர்ந்து வருபவர் நடிகர் விஸ்வக் சென்.. ஒரு கட்டத்தில் இயக்குனராகவும் மாறி பலக்னுமா தாஸ் மற்றும் தாஸ் கா தாம்கி உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‛பங்க்கி' திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் டைரக்சனுக்கு திரும்பியுள்ள விஸ்வக் சென், ‛கல்ட்' என்கிற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு கேஜிஎப் புகழ் இசை அமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். இந்த டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரவி பஸ்ரூருக்கு சுமார் 35 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கோல்ட் வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார் விஸ்வக் சென். இது போன்ற ஒரு வாட்ச்சை, இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் விரும்பி வாங்கியதாகவும் தற்போது அதே போன்ற இன்னொரு வாட்ச்சை இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்காக மட்டுமே வாங்கியதாகவும் கூறி தனது அன்பை வெளிப்படுத்தினார் விஸ்வக் சென்.




