'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

இந்தியத் திரையுலகத்தில் வெளியான டீசர்களில் அதிகப் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருப்பது யஷ் நடித்த கன்னடப் படமான 'கேஜிஎப் 2' டீசர். 2021ம் ஆண்டு வெளிவந்த அந்த டீசர் யு டியுப் தளத்தில் மட்டும் 279 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் வேறு எந்தப் படத்தின் டீசர் அல்லது டிரைலர் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.
அதன் பிறகு 2023ல் வெளிவந்த பிரபாஸ் நடித்த 'சலார்' டீசர் 150 மில்லியன் பார்வைகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' டீசர் 2024ல் வெளிவந்து 124 மில்லியன் பார்வைகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. 2022ல் வெளிவந்த 'ஆதி புருஷ்' டீசர் 110 மில்லியன் பார்வைகளுடன் நான்காவது இடத்திலும், 2023ல் வெளிவந்த கன்னடப் படமான 'மார்ட்டின்' டீசர் 101 மில்லியன் பார்வைகளுடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது.
'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு இத்தனை வருட இடைவெளியில் யஷ் நடித்து மார்ச் 19ம் தேதி வெளியாக உள்ள 'டாக்சிக்' டீசர் சில நாட்களுக்கு முன்பு ஐந்து மொழிகளில் வெளியானது. ஆனால், அனைத்து மொழிகளையும் சேர்த்து 56 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது. படம் வெளியாக இன்னும் சுமார் 20 நாட்கள் உள்ள நிலையில் 100 மில்லியன் பார்வைகளைக் கடக்குமா என்பது சந்தேகம்தான்.
5 வருடங்களுக்கு முன்பு வந்த 'கேஜிஎப் 2' டீசர், 279 மில்லியன் பார்வைகளைப் பெற்ற நிலையில் அதில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே 'டாக்சிக்' டீசர் பெற்றுள்ளது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் கூட.




