பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

மோகன் ஜி இயக்கத்தில், ஜிப்ரான் வைபோதா இசையமைப்பில், ரிச்சர்ட் ரக்ஷனா இந்து சுதன், நட்டி மற்றும் பலர் நடிக்கும் படம் 'திரௌபதி 2'. சரித்திர காலப் படமான உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படத்தின் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
“5 மாத எங்கள் குழுவினரின் கடுமையான அயராத உழைப்பு, உங்களை உறைய வைக்கும் ஒரு வரலாற்று திரைப்படம் உருவாகி வருகிறது. மும்பையில் ஆரம்பித்த #திரெளபதி 2 படப்பிடிப்பு அரியலூரில் நிறைவடைந்தது. டிசம்பர் மாதம் திரையில்.. ஈசனுக்கு நன்றி,” என்று பதிவிட்டுள்ளார்.

படப்பிடிப்பு சிறப்பாக முடிந்ததற்காக திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்து நன்றிக்கடன் செலுத்தியதாக மோகன் ஜி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட போது இந்த வருடத்தில் படம் வெளிவந்துவிடும் என்று அறிவித்துள்ளார்கள்.